கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் இந்திய பயணம் விமர்சனத்துக்கு ஆளான நிலையில் அது குறித்து அவர் மனம் வருந்தி பேசியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்துடன் இந்தியாவுக்கு வருகை தந்தார்.
இந்தியாவில் உள்ள பல புகழ்பெற்ற இடங்களை பிரதமரும் அவர் குடும்பத்தாரும் சுற்றி பார்த்தனர்.
ஆனால் ஆரம்பம் முதலே ஜஸ்டினின் இந்திய பயணம் விமர்சனத்துக்கு உள்ளானது.
காரணம், இந்தியாவுக்கு வரும் உலக தலைவர்களை எப்போது விமான நிலையத்துக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பது வழக்கம்.
ஆனால் ட்ரூடோவை வரவேற்க அவர் செல்லாத நிலையில் சில மத்திய அமைச்சர்கள் மட்டும் சென்றனர்.
இதோடு சீக்கிய தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த நபருடன் ட்ரூடோவின் மனைவி முன்பு எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வெளியாகின.
இந்நிலையில் இந்திய பயணம் குறித்து ட்ரூடோ கூறுகையில், இனி இந்தியாவுக்கு போக மாட்டேன்.
அதே சமயத்தில் இந்திய பயணத்தில் எதிர்மறையான மற்றும் கேலிக்குரிய விடயங்கள் இருந்தபோதிலும் அது நல்ல பயணமாக இருந்தது என கூறியுள்ளார்.
அதே போல கனடிய மக்கள் மத்தியிலும் அவரின் இந்திய சுற்றுப்பயணம் எதிர்மறை தாக்கத்தை உண்டாக்கியது.
கடந்த மார்ச்சில் தற்போது தேர்தல் வந்தால் யாருக்கு ஆதரவளிப்பீர்கள் என மக்களிடம் கேட்ட நிலையில் 33 சதவீதம் பேர் ட்ரூடோவில் லிபரல் கட்சியையும், 38 சதவீதம் பேர் கன்சர்வேடிவ் கட்சியையும் ஆதரிப்போம் என கூறியது குறிப்பிடத்தக்கது.