மக்கள் இன்று பணத்தை சேர்க்கவோ, சரியாக சாப்பிடவோ முடியாத நிலையில் மக்களின் நிலை மாறியிருக்கிறதாக முன்னாள் மகிந்த ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலைகள் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த அரசாங்கம் அதிகளவான வரியை மக்கள் மீது சுமத்திவிட்டிருக்கிறது. இதனால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களால் சரியாக சாப்பிட முடியவில்லை. பணத்தைச் சேமிக்க முடியவில்லை. இந்த நிலையை ஆட்சியேற்ற மூன்றாண்டுகளில் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், நாங்கள் அரசாங்கத்தை அமைக்கும் மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள வரியை 20 வீதத்தில் குறைப்போம். மக்களின் இயல்பான நிம்மதியான வாழ்க்கைக்கு வழியேற்படுத்துவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.