ரஜினி யார்? தூத்துக்குடியில் இறந்த 17 வயதுப் பெண் யார்? வெடித்தது சர்ச்சை

தமிழகத்தின் இனப்படுகொலை என்று கறுப்பு நாளாக பார்க்கப்படுகின்றது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்.

காவல்துறையினர் நடத்திய இந்த தாக்குதலில் 13இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். தமிழ் மக்கள் மீது ஆளும் அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்ட இந்த வன்முறை தொடர்பில் தமிழகம் அதிர்ந்து போயிருக்கிறது.

இது திட்டமிடப்பட்ட தாக்குதல் என்று கொந்தளித்துப் போயிருக்கிறார்கள் தமிழக உறவுகள். உண்மையில் அங்கு என்ன தான் நடந்தது? ஏன் காவல்துறையினர் போராட்டக்காரர்களின் முக்கியமானவர்களில் சிலரை குறி வைத்து சுட்டனர்?

போராட்டத்தில் முன்னிலை வகித்த அந்த இளைஞர், யுவதிகள் முன்னரே அடையாளம் காணப்பட்டனரா? தமிழக அரசாங்கம், மத்திய அரசாங்கத்தின் சொல் கேட்டு உத்தரவிட்டதா? இதுபோன்ற கேள்விகள் ஆயிரம் இருக்கின்றன.

இந்நிலையில் இது தொடர்பாக நேரடியாக களத்தில் நின்ற தூத்துக்குடி அருட்தந்தை வெனிஸ்குமார், வெனி இளம்குமாரன் லங்காசிறி வட்டமேடையில் இணைந்து நேரடி ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார்.

உண்மையில் தமிழகம் ஏன் இந்த சோகத்தையும் கொடூரத்தையும் சந்தித்தது? இதில் நடந்தது தான் என்ன? பல திடுக்கிடும் தகவல்களோடு இணைந்திருக்கிறார்.