எலிசபெத் மகாராணி உலகின் நூற்றுக்கணக்கான நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டிருந்தாலும் ஒரே ஒரு நாட்டில் மட்டும் இதுவரை சென்றதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய வரலாற்றிலேயே அதிக நாடுகளுக்கு விஜயம் செய்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் இரண்டாம் எலிசபெத் மகாராணி.
தென் பசிபிக் தீவான வனூட்டு முதல் இஸ்லாமிய நாடான யேமன் வரை நூற்றுக்கணக்கான நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஆனால் எலிசபெத் மகாராணி இதுவரை அர்ஜென்டீனா நாட்டுக்கு சென்றதில்லை எனக் கூறப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணமாக வரலாற்று ஆய்வாளர்களால் கூறப்படுவது, 30 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கிய பால்க்லேண்ட்ஸ் போர் ஆகும்.
பிரித்தானிய தீவான பால்க்லேண்ட் மீது அர்ஜென்டீனா 1982 ஆம் ஆண்டு படையெடுத்துள்ளது. தொடர்ந்து நடந்த மோசமான எதிர் தாக்குதலுக்கு பின்னர் குறித்த தீவானது மீட்கப்பட்டது.
இருப்பினும் அர்ஜென்டீனா அந்த தீவுக்கு உரிமை கொண்டாடி வருவதுடன் Malvinas என்ற பெயரிட்டு அதிகாரப்பூர்வமாக அழைத்தும் வருகிறது.
குறித்த போரில் 255 பிரித்தானிய ராணுவத்தினரும் 3 பால்க்லேண்ட் தீவுவாசியும் 655 அர்ஜென்டீனா ராணுவத்தினரும் கொல்லப்பட்டனர்.
இது இவ்வாறு இருக்க, பிரித்தானிய அரச குடும்பத்து வாரிசான இளவரசி ஆன் கடந்த 2013 ஆம் ஆண்டு அர்ஜென்டீனா விஜயம் செய்துள்ளார்.
நீண்ட 14 ஆண்டுகளுக்கு பின்னர் பிரித்தானிய அரச குடும்பத்து நபர் ஒருவர் அர்ஜென்டீனா செல்வது அதுவே முதன் முறையாகும்.
கடந்த 2012 ஆம் ஆண்டு பால்க்லேண்ட் தீவில் இளவரசர் வில்லியன் 6 வாரங்கள் தங்கியபோது அவருக்கு எதிராக அர்ஜென்டீனா மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
அர்ஜென்டீனா நாட்டுக்கு மட்டுமல்ல எலிசபெத் மகாராணி இதுவரை பெரு, கொலம்பியா, எக்குவடோர், உருகுவே, பொலிவியா, வெனிசுலா, சூரினாம், பராகுவே உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்றதில்லை.