22 வருட காதலில் திடீரென ஏற்பட்ட சோகம்!… வெளிவந்த புதிய காணொளி

நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் டுவிட்டர் பக்கத்தில் அழகிய காதல் நினைவுகளை சுமந்த காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவரின், 22ஆவது திருமண நாளை முன்னிட்டு இந்த காணொளியை வெளியிட்டுள்ளார். பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர், நடிகை ஸ்ரீதேவியை காதல் திருமணம் செய்துகொண்டார்.

மனைவியின் இறப்புக்கு பிறகு காதல் நினைவுகள் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார். போனி கபூர் வெளியிட்டுள்ள இந்த காணொளியில் ஸ்ரீதேவி கடைசியாக துபாயில் நடைபெற்ற திருமணத்தில் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட காட்சிகள் பதிவாகியுள்ளது.


இதில், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ஸ்ரீதேவியின் இந்த இறுதியான மகிழ்ச்சி நாள் அழகாக உள்ளதாக கூறியுள்ளார்.

அன்பு காதலியான ஸ்ரீதேவி இல்லாது வாழ்க்கை கசந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனது மனைவி நினைவுளோடு என்னுடன் இருக்கிறார் எனவும் கவலையுடன் பதிவிட்டுள்ளார்.