பிரபல பாலிவுட் நடிகை பிபாசாபசு பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமானவர்.
நடிகர் கரன் சிங் குரோவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆன பிபாசாபாசு, பின் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.
இருப்பினும் சமீபத்தில் இவர் தன்னுடைய கணவர் கரன் சிங் குரோவருடன் இணைத்து காண்டம் விளம்பரத்தில் நடித்து சர்ச்சையை ஏற்ப்படுத்தினார்.
39 வயதிலும் யோகா, போன்ற உடல் பயிற்சிகள் செய்து தன்னுடைய உடலை மிகவும் பிட்டாக வைத்திருக்கும் இவர், சிறு வயது முதலே ஆஸ்துமா பிரச்சனையால் அவதி பட்டு வந்துள்ளார்.
ஆஸ்துமா அதிகமானதால் கடந்த சில தினங்களாக அடிக்கடி மருத்துவ மனைக்கு சென்று இதற்கான சிகிச்சை எடுத்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் அவருக்கு நேற்று முன்தினம் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில், பிபாசாபாசு மருத்துவமனையில் சிகிச்சை பெரும் காட்சியை வேடிக்கையாக இன்ஸ்டாகிராமில் அவரது சகோதரி பதிவிட்டுள்ளார்.
இதனால் இவரின் இரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.