கென்யாவில் உள்ள ஒரு ஊரில் பெண்களை பெண்களே திருமணம் செய்து கொள்ளும் ஆச்சரிய சம்பிரதாயம் பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
நரோக் கவுண்டியில் உள்ள இமுரா டிகிர் என்ற ஊரில் வசிக்கும் பெண் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்.
அதாவது இங்குள்ளவர்களுக்கு அதிகளவில் ஆண் குழந்தைகள் பிறப்பதில்லை, அதனால் ஆண் குழந்தை வேண்டும் என்ற காரணத்தாலேயே பெண்ணொருவர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்.
பின்னர் அவர் கணவர் மூலம் பெறும் ஆண் குழந்தையை திருமணம் செய்து கொண்ட பெண் எடுத்து தனது குழந்தையாக வளர்க்கிறார்.
ரயில் டூ என்ற பெண் கூறுகையில், குழந்தைகள் பற்றாக்குறையால் தான் இப்படி நாங்கள் செய்கிறோம்.
குடும்பத்தில் ஒரு ஆண் மகன் இருக்க வேண்டும் என்ற பெருமைப்படக்கூடிய சமுதாயத்தை உருவாக்கவே இம்முயற்சி காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
மேலும் தனக்கு பிறந்த ஐந்து குழந்தைகளும் பெண் குழந்தைகள் என கூறிய ரயில் டூ, ஆண் குழந்தைக்காக தனது பெண் தோழி லிலியனை திருமணம் செய்ததாக கூறுகிறார்.
இதன் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு அவர் தாயாகி உள்ளார்.
இப்படி அந்த ஊர் மக்கள் பலருக்கும் பலவிதமான அனுபவங்கள் இதில் உள்ளது.