தயவுசெய்து உதவுங்கள்! தமிழக மக்களிடம் கண்ணீர் விட்டு கதறிய கேரள குடும்பம்

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஜெஸ்னா, இவர் கஞ்சரபள்ளியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த மார்ச் 22ம் தேதியில் இருந்து ஜெஸ்னாவை காணவில்லை, கடைசியாக முக்குகுத்தட்டு பேருந்து நிலையத்தில் ஜெஸ்னாவை பார்த்ததாக சிலர் தெரிவித்துள்ளனர்.

ஜெஸ்னா மாயமானது குறித்து பத்தனம்திட்டா பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 50 நாட்களுக்கு மேலாகியும் வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றம் இல்லை.

இதனையடுத்து ஜெஸ்னா குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று கேரள காவல்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஜெஸ்னாவின் குடும்பத்தார் மற்றும் அக்கா ஜெபி, தமிழக ஊடகங்கள் மற்றும் மக்களிடம் வாயிலாக தங்கள் என் தங்கைய கண்டுபிடிங்க. தயவுசெய்து உதவுங்க என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் ஜெஸ்னாவை தேடும் பணியை கேரள காவல்துறை முடுக்கிவிட்டுள்ளது. இதற்காக 125 பேர் கொண்ட தனிப்படை கேரள மாநிலம் இடுக்கி வனத்துறையில் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.

திருவல்லா மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் சந்திரசேகர் தலைமையிலான இந்தத் தனிப்படையில், 5 காவல்

கண்காணிப்பாளர்களும் இடம்பெற்றுள்ளனர். தற்போது எருமேலி, முன்டக்கயம், பீர்மேடு மற்றும் குட்டிக்கனம் ஆகிய வனப்பகுதிகளில் தீவிர தேடுதல் நடைபெற்று வருகிறது.