‘காலம் கடந்த ஞானம்’

ஐக்கிய தேசியக் கட்சியின் மீது நம்பிக்கை இழந்துவிட்ட உறுப்பினர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தாமல் அவர்களை மீண்டும் கட்சிக்கு அழைப்பதில் பயனில்லை என்று அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

“காரியவசம் கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைந்துக்கொள்ளுமாறு ஐ.​தே.கவின் பொதுச் செயலாளர், அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அழைப்பு விடுத்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே முன்னாள் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “அழைப்புக்கு நன்றி, ஆனால் கட்சியின் மீது நம்பிக்கையிழந்த உறுப்பினர்களிடத்தில் மீண்டும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தாமல் மீள அழைப்பு விடுப்பதில் எந்த பயனும் இல்லை. நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தாமல் கட்சியை ஒருபோதும் பலப்படுத்த முடியாது. இந்த அறிவிப்பானது ஒரு காலம் கடந்த ஞானமாகும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.