மொபைல் நம்பரை வைத்து அதிஷ்டத்தை எவ்வாறு தெரிந்துகொள்வது?..

மொபைல் போன் இல்லாதவர்கள் யாருமே இல்லை என்கிற அளவுக்கு எல்லோரும் பயன்படுத்தும் பொருளாகிவிட்டது.

தற்போது போன் என்பதை தாண்டி, ஆன்லைன் ஷாப்பிங், டிக்கட் புக்கிங் செய்வதற்கு, ஏன் வேண்டியதை ஆர்டர் செய்து சாப்பிடுவதற்கு கூட ஸ்மார்ட் ஃபோன் பயன்படுகிறது. வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என்று சமூக ஊடகங்களில் நாம் உலவவும் ஸ்மார்ட் ஃபோன் உதவுகிறது.

செல்போன்

அலுவலக மீட்டிங், வியாபார சந்திப்பு, நேர்முக தேர்வு, வீடு என்று நாம் எந்த இடத்திலிருந்தாலும் மொபைல் ஃபோன் தவிர்க்க இயலாததாக நம்முடனேதான் இருக்கிறது. ஆனால், உங்கள் மொபைல் எண், உங்கள் வாழ்வை மாற்ற முடியும் என்று நீங்கள் எப்போதாவது நினைத்துப் பார்த்ததுண்டா? நிறைய பேர் அதிர்ஷ்ட எண்களை குறித்து பேசுவதை பார்க்கிறோம். இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் குறிப்பிட்ட கிழமைகளில், நாள்களில்தான் சில வேலைகளை செய்வார்கள்.

செல்போன் நம்பரும் அதிர்ஷ்டமும்

‘நியூமராலஜி’ என்ற எண் கணிதம், நாம் ஒவ்வொரு எண்ணை உச்சரிக்கும்போது, அது நம் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறுகிறது. அப்படி பார்த்தால், மொபைல் எண் ஒவ்வொருவர் வாழ்வோடும் பிணைந்ததாக இருக்கிறது.

உங்கள் மொபைல் எண்ணை தனித்தனியாக எழுதி, கூட்டிக் கொள்ளுங்கள். உதாரணமாக 9813000516 என்ற எண்ணின் கூட்டுத்தொகை 9+8+1+3+0+0+0+5+1+6=33=6.

இப்படி கூட்டிக்கொண்டு உங்கள் மொபைல் எண்ணின் பலன் என்ன என்று பாருங்கள்.

கூட்டுத்தொகை 1:

அதிகாரம், கட்டளை, சக்தி இவற்றோடு தொடர்புடைய எண். வெற்றி மற்றும் புகழுக்குரிய எண்.

கூட்டுத்தொகை 2:

ரொமாண்டிக் எண். கலை மற்றும் இசையை நேசிப்பவர்களுக்கான பூரணமான எண். உணர்ச்சி, அக்கறை இவற்றோடு தொடர்புடையதும் கூட. இந்த எண்ணுக்குரியவர்கள் அலைபாயும் மனதை உடையவர்களாக இருப்பர்.

கூட்டுத்தொகை 3:

விரிவாக்கம், இலக்கு மற்றும் நிர்வாகம் சார்ந்த எண் இது. எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், ஆலோசகர்கள் மற்றும் ஆன்மீக தலைவர்களோடு தொடர்புடைய எண்.

கூட்டுத்தொகை 4:

இந்த எண்ணின் சொந்தக்காரர்கள், துடிப்பான அதேவேளையில் அமைதி இல்லாத, நிலையில்லாத மனதுள்ளவர்கள். விஞ்ஞானிகள் மற்றும் ஊடகங்களோடு தொடர்புடையவர்கள், அரசியல்வாதிகள் இந்த எண்ணை பயன்படுத்தலாம்.

கூட்டுத்தொகை 5:

மாற்றம், சாதனை இவற்றை விரும்புபவர்களுக்கு பரப்பான வாழ்பவர்களுக்கு, வர்த்தகம் செய்வோருக்கு ஏற்ற எண்.

கூட்டுத்தொகை 6:

ஆர் யூ இன் லவ், காதல் செய்கிறீர்களா? இந்த எண் உங்களுக்கு ஏற்றது. இல்லத்தரசிகளுக்கு, குடும்பத்தோடு பிணைப்புள்ளவர்களுக்கு மட்டுமல்ல, இசை, கலை மற்றும் நடிப்புத் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு பொருத்தமான எண்.

கூட்டுத்தொகை 7:

தெய்வாதீனம், மறைபொருளுக்குரிய எண். ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளோருக்கு, சிந்தனையாளர்களுக்கு ஏற்ற எண். இந்த எண்ணுடையோர் குறிக்கோள்களை அடைவதற்கு அதிகம் உழைக்க வேண்டியதிருக்கும்.

கூட்டுத்தொகை 8:

வெகுஜன தொடர்புடைய வேலைகளை செய்வோருக்கு பொருத்தமான எண். நீங்கள் கடினமாக உழைத்தால் செல்வம் சேரும். வணிகம் செய்வோர், கல்வியாளர்கள், வழக்குரைஞர்களுக்கு ஏற்ற எண்.

கூட்டுத்தொகை 9:

அதிர்ஷ்டமான எண். ஆரோக்கிய பிரச்னை உள்ளவர்கள் இந்த எண்ணை உபயோகிப்பதை தவிர்க்கவும். மருத்துவம், மருத்துவம் சார்ந்த மக்களுக்கு குணமளிக்கும் துறையில் இருப்போர், பதிப்பகம் மற்றும் அச்சு தொழில் புரிவோருக்கு ஏற்ற எண். தலைவர்களுக்கு நன்மை கொண்டுவரத்தக்க எண் இது.

தவிர்க்க வேண்டியவை

ஒரே எண் (டிஜிட்) அதிக முறை வரக்கூடியது போன்ற மொபைல் எண்ணை கூடுமானவரை தவிர்க்கவும். நம்மில் சிலரோ ஒரே எண் திரும்பத் திரும்ப வந்தால் சொல்வதற்கு மிக எளிமையாக இருக்கும் என்பதால், எண்களை அப்படி தேர்ந்தெடுப்போம். ஆனால் நியூமராலஜிப்படி அப்படி ஒரே எண் திரும்பத் திரும்ப வரும் எண்ணை தேர்ந்தெடுப்பது ராசியானதாக இருக்காது என்று கூறப்படுகிறது.

பிறந்த நாளும் மொபைல் எண்ணும்

1, 10, 19, 28 பிறந்ததேதி கொண்டவர்கள் 4, 2, 3 மற்றும் 9 கூட்டுத்தொகை வரக்கூடிய மொபைல் எண்ணை உபயோகிக்கலாம்.

2, 11, 20, 29 பிறந்ததேதி கொண்டவர்கள் 1 மற்றும் 5 கூட்டுத்தொகை வரக்கூடிய மொபைல் எண்ணை உபயோகிக்கலாம்.

3, 12, 21, 30 பிறந்ததேதி கொண்டவர்கள் 1, 2 மற்றும் 9 கூட்டுத்தொகை வரக்கூடிய மொபைல் எண்ணை உபயோகிக்கலாம்.

4, 13, 22, 31 பிறந்ததேதி கொண்டவர்கள் 6 மற்றும் 8 கூட்டுத்தொகை வரக்கூடிய மொபைல் எண்ணை உபயோகிக்கலாம்.

5, 14, 23 பிறந்ததேதி கொண்டவர்கள் 1 மற்றும் 6 கூட்டுத்தொகை வரக்கூடிய மொபைல் எண்ணை உபயோகிக்கலாம்.

6, 15, 24 பிறந்ததேதி கொண்டவர்கள் 5,8,4 மற்றும் 7 கூட்டுத்தொகை வரக்கூடிய மொபைல் எண்ணை உபயோகிக்கலாம்.

7, 16, 25 பிறந்ததேதி கொண்டவர்கள் 9 மற்றும் 6 கூட்டுத்தொகை வரக்கூடிய மொபைல் எண்ணை உபயோகிக்கலாம்.

8, 17, 26 பிறந்ததேதி கொண்டவர்கள் 5,6 மற்றும் 4 கூட்டுத்தொகை வரக்கூடிய மொபைல் எண்ணை உபயோகிக்கலாம்.

9, 18, 27 பிறந்ததேதி கொண்டவர்கள் 1,2,3 மற்றும் 7 கூட்டுத்தொகை வரக்கூடிய மொபைல் எண்ணை உபயோகிக்கலாம்.

இது பொதுவான எண் கணிதம் சார்ந்த கணிப்புகள். பிறந்தநாளை பொறுத்து நபருக்கு நபர் மாறுபடக் கூடியது. எப்படி பார்த்தாலும் தனிப்பட்ட ஒருவரின் நம்பிக்கை சார்ந்த விஷயம் என்பதை கவனத்தில் கொள்வது அவசியம்.