இன்றைய ராசிபலன் (07/06/2018)

  • மேஷம்

    மேஷம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்வீர்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஆன்மிக பெரியோரின் ஆசி கிட்டும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கை யாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சிகள் பலிதமாகும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டி ருந்ததை வாங்கித் தருவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்று கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.

  • கடகம்

    கடகம்: நண்பகல் 12.37 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். தாய் வழியில் மதிக்கப்படுவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். நண்பகல் 12.37 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

  • கன்னி

    கன்னி: சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள்.

  • துலாம்

    துலாம்: மற்றவர்களை நம்பி எந்த வேலைகளையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை உணருவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். அனுபவ அறிவால் முன்னேறும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களை
    கட்டும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டாகும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

  • தனுசு

    தனுசு: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

  • மகரம்

    மகரம்: இங்கிதமாக பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் மதிப்பார்கள். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

  • கும்பம்

    கும்பம்: நண்பகல் 12.37 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். பிற்பகல் முதல் வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.

  • மீனம்

    மீனம்: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதர வகையில் பிணக்குகள் வரும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். நண்பகல் 12.27 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் நிதானம் தேவைப்படும் நாள்.