யாழ். சென்ற நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞர்!

கொழும்பிலிருந்து இயங்கும் குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்துவதற்கு தன்னை பயன்படுத்திக்கொண்டுள்ளதாக சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு போதைப்பொருள் விநியோகிக்கும் இளைஞர் ஒருவர் கலேவல பகுதியில் வைத்து நேற்று மாலை கைதுசெய்யப்பட்டிருந்தார்.

கொழும்பு – வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நிலையில், அவரிடம் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டிருந்னர்.

“கொழும்பிலிருந்து இயங்கும் குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்துவதற்கு தன்னை பயன்படுத்திக்கொண்டுள்ளது. பொருட்களை கொண்டு செல்வது போன்று யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருட்களை கொண்டு செல்வது வழமை.

கொழும்பில் குறிப்பிட்ட குழுவை சேர்ந்தவர்கள் தனக்கு போதைப்பொருட்களை வழங்குவார்கள். பின்னர் தனக்கு பணம் வழங்கி யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருளை கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்வார்கள்.

யாழ்ப்பாண பேருந்து நிலையத்தில் உள்ள நபர் ஒருவரிடம் தான் நாளாந்தம் பொருட்களை வழங்குவது வழமை. யாழ்ப்பாணத்திற்கு சென்றவுடன் தனக்கு மேலும் போதைப்பொருள் வழங்கப்படுகின்றது. அதன் பின்னர் தான் பேருந்தில் ஏறி கொழும்பு வருவது வழமை.“ என அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த நபர். இவ்வாறான நடவடிக்கையில் நீண்ட காலம் ஈடுபட்டு வந்தமை விசாரணையின் போது தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.