புத்தளம் பிரதேசத்தில் வனப்பகுதியொன்றில் காதலுடன் உல்லாசமாக இருந்த சிறுமி மற்றும் காதலனை கையும் களவுமாக பிடித்த, புத்தளம் பொலிஸார் . அவர்களை கைது செய்து சிறுமியை வைத்திய பரிசோதனைக்குட்படுத்தியுள்ளதோடு, காதலனை இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது.
புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மானவெரிய பிரதேசத்தில் வசித்து வரும் 12 வயது சிறுமியொருவர் 20 இளைஞருடன் கடந்த சில மாதங்களாக காதல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 29 ஆம் திகதியளவில் குறித்த சிறுமி காதலனுடன் அச்சிறுமியின் வீட்டுக்கு பின்னாலுள்ள வனப்பகுதியில் வைத்து உடலுறவில் ஈடுபட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை இச்சம்பவம் குறித்து சிறுமி நண்பியொருவருடன் பகிர்ந்து கொண்டுள்ள நிலையில் இவ்விடயம் குறித்து பிரதேச செயலகத்தின் சிறுவர் உரிமைகளை மேம்படுத்தும் அதிகாரிகளுக்கு அயலவர்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையிலேயே இவ்விடயம் குறித்த அறிந்து கொண்ட சிறுமியின் தாயாரால் நேற்று பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டு காதலன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.