ரஷ்யாவில் கணவனிடம் விவாகரத்து கேட்டு தகராறு செய்த மனைவிக்கு எதிர்பாராத நடவடிக்கை ஒன்றை பதிலாக அளித்தான் அந்தக் கணவன்.
காரில் நடந்த தகராறுக்குப்பின் காரிலிருந்து இறங்குகிறாள் ஒரு பெண். அவள் நடந்து கொஞ்சம் தூரம் சென்றதும் வேகமாக காரை ஓட்டி செல்லும் கணவன் காரை வேகமாகத் திருப்பி அந்தப் பெண் எதிர்பாராத நேரத்தில் அவள் மீது மோதுகிறான்.
அந்தப் பெண் நிலை தடுமாறி கீழே விழுந்தாலும் சமாளித்து எழுந்து கொள்கிறாள். நடக்க முயன்ற அவளால் நடக்க முடியாததால் சாலையோரமாக சென்று அமர்ந்து விடுகிறாள்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பொலிசாருக்கும் ஆம்புலன்ஸுக்கும் தகவல் கொடுத்தனர்.
பொலிசார் அந்த காரை ஓட்டிய மனிதனிடம் என்ன நடந்தது என்று விசாரிக்கிறார்கள். தாங்கள் இருவரும் சண்டையிட்டதாகக் கூறுகிறன் அவன்.
வேண்டுமென்றேதான் அவளை இடித்தாயா என்று கேட்க, பொறுக்க முடியாத கோபத்தில் இடித்து விட்டேன் என்கிறான் அவன்.
அவள் உன்னைத் திட்டினாளா அடித்தாளா என்று பொலிசார் கேட்க, திட்டவும் அடிக்கவும் செய்தாள் என்கிறான் அந்த கணவன்.
அந்தப் பெண்ணுக்கு பெரிய காயங்கள் எதுவும் ஏற்படாத நிலையில் அவளது கணவன் கைது செய்யப்பட்டானா என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.