கடந்த மாதம் 22-ஆம் திகதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் பிரச்சனைக்காக போராடிய போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்தக் கொடூர தாக்குதலில் பெண்கள், பள்ளி மாணவி உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொடூர செயலை கண்டித்து மக்களும் பல்வேறு சினிமா துறை சார்ந்த பிரபலங்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
நேற்று இரவு போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க தூத்துக்குடிக்கு சென்றிருந்தார் நடிகர் விஜய். அப்போது தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின் போது துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவராகளை குடும்பங்களை நேரில் சந்தித்த விஜய், அவர்களது குடும்பத்தாருக்கு 1 லட்ச ரூபாய் நிதியுதவியும் வழங்கினார்.
மேலும் நேரம் கடந்து வந்தமைக்கு, தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், இந்த நேரத்தில் வந்திருப்பதால் தன்னை தவறாக நினைக்கவேண்டாம் என்றும் கூறியுள்ளார்.தன்னை புகைப்படம் எடுக்க முயன்றவர்களிடம் தயவு செய்து புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று நடிகர் விஜய் வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.
விஜய் குறித்து மக்களிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர்கள் விஜய் வேறு யாரும் இல்லை,அவர் எங்களில் ஒருவராக என் வீட்டு மகன் போல் வந்து எங்களுக்கு ஆறுதல் கூறினார்,இங்கு வந்து அனைவரையும் சந்தித்து ஆறுதலை சொன்னதற்கு அந்த தம்பிக்கு நன்றி என கூறியுள்ளனர்.
நேற்று இரவு எங்கள் வீட்டிற்கு வந்திருந்த விஜய் , எங்களின் சோகத்தில் பங்கெடுத்துக் கொண்டார். எங்களிடம் மிக எளிமையாக நடந்து கொண்ட விஜய் நேரம் கடந்து வந்ததற்கு மன்னித்து விடுங்கள் என்று பெருந்தன்மையுடன் கூறினார் என்று தெரிவித்துள்ளார்.