இந்தியாவில் மது விற்பனையால் பல குடும்பங்கள் அழிந்து வருகின்றன.
மது குடிக்கும் ஆண்களால், பெண்கள் பல துயரங்களை அனுபவித்து வருகின்றனர். ஆனால் இப்போது, பெண்களில் பலர் தங்களைத் தாங்களே மதுவால் அழித்துக்கொண்டிருக்கின்றனர் என்பதுதான் அதிர்ச்சியின் உச்சம்.
கோவையில் பள்ளி மாணவி மது குடித்து, தள்ளாடியதும் தஞ்சையில் இன்னொரு இளம்பெண் மது குடித்துவிட்டு ரோட்டில் போவோர் வருவோரை கலாட்டா செய்ததும் என பல நிகழ்வுகள் அரங்கேறி இருக்கிறது.
இந்நிலையில், மூன்று இளம்பெண்கள் ஆண்களைப் போலவே மது குடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளுடனும், உடன் சாப்படும் எடுத்துக் கொண்டு மதுவை குடிக்கின்றனர். அதை அருகிலிருக்கும் ஒரு பெண் வீடியோ எடுத்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.