சீனாவில் தெருவோர உணவம் ஒன்றில் சமைத்துக்கொண்டிருந்த பாத்திரத்தில் இருந்து கடல் நண்டு ஒன்று வெளியேறி தப்பிய வீடியோ ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
குறித்த கடல் நண்டின் ஒரு வளை நகம் ஒன்று சூடான குழம்பால் வெந்து போயிருக்க, அதை உதறிவிட்டு பாத்திரத்தில் இருந்து நண்டு வெளியேறியுள்ளது.
சீனாவில் தெருவோர உணவகங்களில் நமக்கு தேவையான மீன் உணவுகளை உயிருடன் இருக்கும்போதே தெரிவு செய்து சமைத்து சாப்பிடலாம்.
அந்த வகையில் சுற்றுலாப்பயணி ஒருவர் கடல் நண்டு உணவுக்கு ஆர்டர் தந்துள்ளார். அவர் தெரிவு செய்து தந்த கடல் நண்டுகளை அந்த உணவக சமையல் காரர் சமைத்து வந்தார்
அப்போதுதான் இச்சம்பவம் நனடந்துள்ளது. இதை உடனடியாக அவர் தமது மொபைலில் படம் எடுத்துள்ளார்.மட்டுமின்றி தப்பிய அந்த கடல் நண்டை தமது வளர்ப்பு பிராணியாக அவர் தனது சொந்த நாட்டுக்கே எடுத்தும் சென்றுள்ளார்.
அந்த நபரின் இரக்க குணத்திற்கு சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மட்டுமின்றி 11 நொடிகள் மட்டுமே கொண்ட அந்த வீடியோவானது இதுவரை பல லட்சம் மக்கள் கண்டு களித்துள்ளனர்