இலங்கையில் சினிமா பாணியில் மணமகனை ஏமாற்றிய மணப்பெண், தன் காதலனுடன் தப்பிச் சென்றுள்ளார்.
பலங்கொடையில் திருமணத்திற்கு தயாராக மணக்கோணத்தில் மணமகன் வரும் போது காதலனுடன், மணமகள் தப்பி சென்றுள்ளார்.
பலங்கொடை நகரத்தில் இருந்து 6 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள பிரதேசத்தின் பிரதான வீதி ஊடாக மோட்டார் சைக்கிளில் ஏரிய நிலையில் மணமகள் ஒருவர் இளைஞருடன் வேகமாக செல்லும் காட்சியை வீதியில் செல்லும் பலர் அவதானித்துள்ளனர்.
மணமகளை குழப்பி பார்க்கின்றார்கள் என்றே வீதியில் சென்றவர்கள் நினைத்துள்ளனர். எனினும் அவ்வாறான ஒன்று இல்லை என பின்னரே தெரியவந்துள்ளது.
பலங்கொடை நகரத்தில் உயர்தரம் வரை கற்று தொழில் ஒன்றுக்காக காத்திருந்த இளம் பெண் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார். பாடசாலை காலத்தில் இருந்து காதலித்த இளைஞனை வீட்டவர்களுக்கு விருப்பம் இல்லை. இதனால் இருவரும் இரகசியமாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பெண்ணின் விருப்பம் இன்றி பலவந்தமான இந்த திருமணம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தன்னை எப்படியாவது காப்பாற்று பெண் தனது காதலனுக்கு அறிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் திருமண தினத்தன்று ஆடைகளை அணிவிக்கப்பட்ட பின்னர் தனது பையை காரில் இருந்து எடுத்து வருவதாக கூறி மணமகள் சென்றுள்ளார். காருக்கு அருகில் சென்றவர் அங்கு நின்ற மோட்டார் சைக்கிளில் ஏரி தப்பிச் சென்றுள்ளனர்.
சற்று நேரத்தின் பின்னர் வீட்டிற்கு தொலைபேசி அழைப்பேற்படுத்திய மகள், நாங்கள் ஹப்புத்தளையில் இருக்கின்றோம். காதலித்த இளைஞனை திருமணம் செய்து கொள்ளபோகின்றேன் என மகள் குறிப்பிட்டுள்ளார்.
திருமணத்திற்காக வந்து கொண்டிருந்த மணமகனுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவர் பாதி வழியிலேயே திரும்பி சென்றுள்ளார் என தெரிவிக்கபபடுகின்றது.
எனினும் ஏற்பாடு செய்யப்பட்ட மணமகன் மது மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவர் என பின்னரே தெரியவந்துள்ளது. இதனால் இந்த மணமகனை தேடி கொடுத்த தரகரை குடும்பத்தினர் இணைந்து தாக்கியுள்ளனர்.