494 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தாமரை தடாகம் கலையரங்கில் நடைபெறவுள்ளது.மேல் மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்யும் வகையில் 494 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
2014, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சைகளில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.