பிரபல நடிகர் தனுஜ் மகஷாப்தேவின் அம்மா உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.
பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளவர் தனுஜ்.
இவர் தாரக் மேத்தா என்ற தொலைக்காட்சி தொடரில் கிருஷ்ணன் சுப்ரமணியன் ஐயர் என்ற தென்னிந்தியர் கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பெரும் புகழ் பெற்றார்.
இந்நிலையில் தனுஜ்ஜின் தாய் ஷீலா உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.
சில காலமாக கல்லீரல் நோயால் ஷீலா பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான சிகிச்சையை எடுத்து வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஷீலாவின் உயிர் பிரிந்துள்ளது.
அம்மா மேல் அளவுக்கடந்த அன்பு வைத்துள்ள தனுஜ்ஜுக்கு அவரின் மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீங்கள் மீண்டும் வர வேண்டும் அம்மா என தனுஜ் உருக்கமாக தனது தாய் குறித்து கூறியுள்ளார்.