மஹிந்தவின் இல்லத்தில் பதற்றத்தால் பொலிஸார் குவிப்பு…

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், மஹரகம நகர சபையில் வெற்றி பெற்ற சுயாதீன குழுக்களைச் சேர்ந்த 6 உறுப்பினர்கள் திடீரென பதவி விலகியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து குறித்த வெற்றிடங்களை நிரப்புவதற்காக காந்தி கொடிகார உள்ளிட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஆறு பேருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் குறித்த ஆறு பேரும் மஹரகம நகர சபை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மஹரகம நகர சபைக்கு முன்னாள் நகரசபைத் தலைவர் காந்தி கொடிக்கார உட்பட மேலும் ஐவர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாகவும், தற்போதைய நிலவரப்படி அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

பதவியேற்று சில காலத்திலேயே ஒரே தடவையில், திடீரென சுயேற்சைக் குழுவைச் சேர்ந்தவர்கள் பதவி விலகியது எதனால்? அவர்களுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டனவா?

இதன் பின்னணி என்ன? போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்து அரசியல் களத்தில் சர்ச்சைகளைத் தோற்று வித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.