சிவாஜிலிங்கத்திற்கு மாரடைப்பு! யாழ். வைத்தியசாலையில் அனுமதி

வடமாகாண சபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இவர் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

1957ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் பிறந்த இவருக்கு தற்போது 61 வயதாகின்றமை குறிப்பிடத்தக்கது.