கோப் குழு என அழைக்கப்படும் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவராக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
8வது நாடாளுமன்றத்தில் இரண்டாவது கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இன்று கோப் குழு முதல் முறையாக கூடியது.
நாடாளுமன்றத்தில் இரண்டாவது கூட்டத் தொடர் கடந்த மே மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமானது, முன்னர் இருந்த கோப் குழு மீண்டும் நியமிக்கப்பட்டது.
கோப் குழுவின் உறுப்பினராக இருந்த வீரகுமார திஸாநாயக்கவுக்கு பதிலாக தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர நியமிக்கப்பட்டார்.
26 உறுப்பினர்களை கொண்ட கோப் குழு இன்று முற்பகல் கூடியது. இதனிடையே அரச கணக்காய்வு தெரிவுக்குழுவின் தலைவராக அமைச்சர் லசந்த அழகியவண்ண நியமிக்கப்பட்டுள்ளார்.