காலா திரைப்படத்தில் ரஜினிகாந்த்துடன் திரையில் தோன்றும் மணி என்ற நாய்க்கு செம கிராக்கி ஏற்பட்டுள்ளது.
ரூ.2 கோடி வரை கொடுத்து வாங்க பணக்காரர்கள் சிலர் தயாராக உள்ளனராம்.
கதைக்கு தேவை என்பதற்காக சுமார் 30க்கும் மேற்பட்ட நாய்களை பார்வையிட்டு, அதில் மணிதான் சிறப்பாக இருப்பதாக கூறி தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித்.
மணியின் பயிற்சியாளர் சைமன் கிறிஸ்டோபர், சூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிகாந்த்துடன் ஈஸியாக பழகி வந்ததாம் மணி. இதனால் சைமனுக்கு வேலை எளிதாகிவிட்டது.
இப்போது, இந்த நாய்க்கு பயங்கர மவுசு. மணியை ரூ.2 கோடிக்கு விலை பேசுகிறார்களாம் சில பணக்காரர்கள்.
ஆனால், தான் ஒரு பிள்ளையை போல வளர்ப்பதாக சைமன் கூறிவிட்டார். இப்போது பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்க மணிக்கு வாய்ப்பு வந்துள்ளதாம்.