பச்சிளம் குழந்தையை தெருவில் வீசிய தாய்: சிசிடிவி கமெராவில் சிக்கிய காட்சி

உத்திரபிரதேச மாநிலத்தில் பிறந்த பச்சிளம் குழந்தையை பெண் ஒருவர் தெருவில் வீசிச்சென்ற காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், முசாபர் நகரில் உள்ள ஒரு சிறிய தெருவில் யாரும் இல்லை, அப்போது அந்த வழியாக ஒரு கார் மட்டும் உள்ளே நுழைகிறது.

அது ஒரு வீட்டு வாசலின் முன் நிற்கிறது, பின் தன் முகத்தை மூடியபடி ஒரு பெண், காரின் கதவைத் திறந்து பிறந்த குழந்தையை அந்த வீட்டு வாசல் முன் வைத்துவிடுகிறார்.

அடுத்த நிமிடம் கார் புறப்பட்டுச் சென்று விடுகிறது, இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

பிறகு குழந்தையை மீட்டு அப்பகுதி மக்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.