குப்பையில் வீசப்பட்ட குழந்தைக்கு தாய்ப்பாலூட்டியது எதற்காக? பொலிசின் நெகிழ்ச்சி காரணம்

பெங்களூரில் பிறந்த பச்சிளம் குழந்தைக ஒன்று பிளாஸ்டிக் பையில் கட்டப்பட்டு ஒதுக்குப்புறமாக இடத்தில் வீசப்பட்டிருந்த நிலையில் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

தொப்புள்கொடி அறுக்கப்படாத நிலையில் அனாதையாக கிடந்த குழந்தையை மீட்ட பொலிசார், மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி அளித்த பின்னர், மீண்டும் அக்குழந்தை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொலிசாரிட இருந்த குழந்தை பசியால் அழுததைப்பார்த்த அங்கிருந்த பெண் பொலிஸ் அர்ச்சான அக்குழந்தைக்கு தாய்ப்பாலுட்டியுள்ளார். அவருக்கு 3 மாதங்களுக்கு முன்னர் தான் குழந்தை பிறந்துள்ளது. மகப்பேறு விடுமுறை முடித்து அவர் அன்றுதான் பணிக்கு திரும்பியுள்ளார்.

இதுகுறித்து அர்ச்சனா கூறியதாவது, இந்த குழந்தையின் அழுகுரலை கேட்கையில் எனது குழந்தையின் அழுகுரல் போன்று இருந்தது. எந்த குழந்தையாக இருந்தாலும் பரவாயில்லை. குழந்தையின் பசியை தீர்க்கவேண்டும் என கூறியுள்ளார்.

இவரின் இந்த செயலுக்கு காவல்துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த செய்தி சமூகவலைதளங்களில் வெளியானதையடுத்து மக்கள் அனைவரும் பெண் பொலிசிற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். தற்போது அக்குழந்தையை குழந்தைகள் காப்பகத்தில் பொலிசார் ஒப்படைத்துள்ளனர்.

அக்குழந்தைக்கு கர்நாடக முதல்வர் குமாராசாமியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாலூட்டியது குறித்து பெண் பொலிஸ் அளித்துள்ள விளக்கத்தில், எனக்கு ஐந்து மாத ஆண் குழந்தை உள்ளது. கைவிடப்பட்ட குழந்தை பற்றி தகவல் வந்ததும் நாங்கள் விரைந்து சென்று அதை மீட்டோம். குழந்தையை கைகளால் தூக்கினேன்.

அப்போதுதான் குழந்தை பிறந்திருக்க வேண்டும். ரத்தக் காயமும் இருந்தது.உடனடியாக அருகில் இருந்த லட்சுமி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். மருத்துவர்கள் குழந்தை நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகத் தெரிவித்தனர். உடனே குழந்தை அழத் தொடங்கியது. தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தது. அது பசிக்காக அழுகிறது என புரிந்தது.

யோசிக்காமல் தாய்ப்பால் கொடுத்தேன். சிறிது நேரத்தில் குழந்தை அழுகையை நிறுத்திவிட்டது. நான் பால் கொடுக்கும்போது என் மகன் அஷித்துக்கு கொடுப்பதாக நினைத்துக்கொண்டேன். தாய்ப்பால் கொடுத்ததை தவிர நான் வேறு ஒன்றும் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.