கொழும்பில் இருந்து பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் பெண் ஒருவர் குழந்தையை பிரசவித்துள்ளார்.
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு வரை பயணித்த தபால் ரயிலில் இவ்வாறு குழந்தை பிறந்துள்ளது.
நேற்று இரவு குறித்த பெண்ணுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தை பிரசவித்த பெண் ஹபரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளார்.
26 வயதுடைய இந்த பெண் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் என தெரியவந்துள்ளது.
தாய் மற்றும் குழந்தை தற்போது ஆரோக்கியமான இருப்பதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.