வெளிநாடு சென்று இலங்கை திரும்பிய தம்பதியர்! நள்ளிரவில் ஏற்பட்ட விநோதம்

வெளிநாடு சென்று இலங்கை திரும்பிய தம்பதியர் விநோதமான சம்பவம் ஒன்றுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

தலாத்துஓய நகரத்திற்கு அருகில் உள்ள கிராமத்தில் வாழும் தம்பதியர் வீட்டில் விநோதமான முறையில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மகிழ்ச்சியாக வாழும் இந்த தம்பதியினர் வழமை போன்று, இரவு உணவுவேளை முடிந்தவுடன் உறங்கும் அறைக்கு சென்றுள்ளனர்.

அன்றைய நாள் நள்ளிரவில் திருடன் ஒருவன் வீட்டுக்குள் புகுந்துள்ளான். பெறுமதியான பொருட்களை தேடி வீடு முழுவதும் சுற்றித் திரிந்துள்ளான்.

இதனை அவதானித்த மனைவி, கணவன் தான் சுற்றித் திரிவாக எண்ணி இந்த நேரத்தில் என்ன செய்கிறீர்கள்? இருட்டில் நடந்து விழுந்து எழும்ப வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் உறங்கிக் கொண்டிருந்த கணவருக்கு, மனைவி பேசிய சத்தம் கேட்ட போதிலும், அவர் கனவில் புலம்புகின்றார் என எண்ணியுள்ளார்.

நான் உறக்கத்தில் நடப்பதில்லை கனவில் புலம்பாமல் உறங்குமாறு சத்தமாக கூறி விட்டு அடுத்த பக்கம் புரண்டு படுத்துள்ளார் கணவர்.

அடுத்த நாள் காலை எழுந்து பார்க்கும் போது அலுமாரியில் வைக்கப்பட்ட பொருட்கள் சிதறிக் கிடந்துள்ளன. வீட்டில் இருந்த பணம் காணாமல் போயுள்ளது. பின்னர் இரவு தான் பேசியது திருடனுடன் என்பதனை மனைவி புரிந்து கொண்டுள்ளார்.

இந்த தம்பதியினர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளிநாடு சென்று நாடு திரும்பியமையினால் அவர்களிடம் பெருந்தொகை பணம், நகைகள் இருக்கும் என திருடன் எண்ணியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.