இந்த காலத்தில் பலருக்கு திருமணம் நடப்பதே பெரிய காரியமாக இருக்கிறது. சென்ற நூற்றாண்டில் கள்ளிப்பால் கொடுத்த ஆயாக்களை எல்லாம் இந்த நூற்றாண்டின் இளைஞர்கள் திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்த நூற்றாண்டில் எல்லாம் சாதி, மதம், குலம், கோத்திரம் பார்ப்பதற்கு எல்லாம் நேரமே இருக்காது. முந்திக் கொண்டு ஆண்கள் வரிசையில் நின்று சீர்வரிசை, டவுரி கொடுத்தால் தான் பெண் கிடைக்கும் என்ற நிலை கூற உண்டாகலாம்.
காலமோ இப்படி சென்றுக் கொண்டிருக்க… இன்னும இந்தியாவின் இந்தவொரு கிராமத்தில் மட்டும் ஊரில் இருக்கும் எல்லா ஆண்களும் இரண்டு பெண்களை கல்யாணம் செய்துக் கொண்ட ஜமாய்க்கிறார்கள். இதற்கு பின்னணியில் ஒரு காரணமும் கூறப்படுகிறது.
ராஜஸ்தான் தேராசர் (Derasar) என்று அழைக்கப்படும் இந்த கிராமம் ராஜாஸ்தான் மாநிலத்தின் பர்மெர் எனும் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இந்த கிராமத்தில் மொத்தம் 70 இஸ்லாமிய குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த இஸ்லாம் குடும்பங்களை சேர்ந்தவர்கள் இரண்டு திருமணம் செய்யும் வழக்கம் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு மனைவியை கட்டிக் கொண்டே பலர் திண்டாடிக் கொண்டிருக்கையில்… இவர்கள் இரண்டு மனைவிகளை கட்டிக் கொண்டு சந்தோசமாக வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.
இரண்டாம் திருமணம் செய்ய காரணம்
தேராசர் கிராமத்தில் வாழ்ந்து வரும் இஸ்லாமிய குடும்பத்தார் பின்பற்றி வரும் இந்த இரண்டு திருமணம் வழக்கத்திற்கு காரணமும் கூறப்படுகிறது.
அது கொஞ்சம் அதிர்ச்சி அளிக்கும் வகையிலும் இருக்கிறது. இந்த கிராமத்தில் வசிக்கும் ஆண்களுக்கு முதல் மனைவி மூலம் வாரிசு தரிக்காது என்றும், எனவே, குழந்தை பெற்றுக் கொள்வதற்கு என இரண்டாம் திருமணம் செய்துக் கொள்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
நம்பிக்கை
முதல் மனைவி மூலம் குழந்தை கிடைக்காது… ஆகையால் தான் இரண்டாம் திருமணம் செய்துக் கொள்கிறோம் என்று இவர்கள் சும்மா ஒரு காரணாம் கூறுகிறார்கள் என்று பலர் கருதலாம்.
ஆனால், உண்மையிலும் அப்படி தான் நடக்கிறது இந்த கிராமத்தில். இந்த கிராமத்தில் வசிக்கும் ஆண்கள் அனைவரும் தங்கள் இரண்டாம் மனைவி மூலமாக மட்டுமே குழந்தை பெற்றுள்ளனர்.
முதல் மனைவி மூலம் யாருக்கும் குழந்தை பிறக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, இந்த முறையை இவர்கள் வழக்கமாக பின்பற்றி வருகிறார்கள்.
அர்த்தமற்றது
தேராசர் கிராமத்தில் இவர்கள் பின்பற்றி வருவது அர்த்தமற்ற வழக்கமாக இருக்கிறது. இந்த வழக்கத்தை போலி என்று நிரூபிக்க வேண்டும், இதை மாற்ற வேண்டும் என்று கருதி சில ஆண்கள் ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்துக் கொண்டதாகவும். அவர்களுக்கு தங்கள் முதல் (ஒரே) மனைவி மூலம் குழந்தை பிறக்கவில்லை என்றும் கூறுகிறார்கள்.
இந்த கிராமத்தில் காணப்படும் இந்த வழக்கம் மிகவும் விசித்திரமாக இருக்கிறது.
வினோதம்
கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று நம் ஊர்களில் ஒரு பழமொழி கூறுவதுண்டு.
என்ன குணம் படைத்திருதாலும் தாலி கட்டியவனே கணவன். அவனை யாருடனும் பங்கிட்டுக் கொள்ள மாட்டேன் என்பது தான் இந்திய பெண்களின் குணம். ஆனால், ராஜஸ்தானின் இந்த கிராமத்தில் மட்டும் இது வினோதமாக இருக்கிறது.
இந்த கிராமத்தில் வசிக்கும் எந்தவொரு முதல் மனைவியும் இரண்டாம் தாரத்தை கண்டு பொறாமை படுவதில்லை. இவர்களிடம் கவலை இல்லை.
ஒரே வீட்டில் கணவனும், இரண்டு மனைவியரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். உடனே இங்கிருந்து படை எடுக்க நினைக்க வேண்டாம். இது அந்த ஊர்களில் வசிக்கும் ஆண்களுக்கு மட்டுமே பொருந்தும்.
சட்ட விரோதம்
என்ன தான் காரணம் கூறி ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் தேராசர் கிராம மக்கள் இரண்டு திருமணம் செய்து வந்தாலும், இந்திய திருமணம் சட்டமானது பலதாரமணத்தை எதிர்க்கிறது.
இந்திய திருமண சட்டத்தின் படி பார்த்தால்… முதல் கணவன் அல்லது மனைவி இறந்துவிட்டாலோ… அல்லது சட்டப்படி விவாகரத்து பெற்றுவிட்டாலோ மட்டும் தான் அவர்கள் வேறு ஒரு பெண்ணையோ, ஆணையோ திருமணம் செய்துக் கொள்ள முடியும்.
இஸ்லாம் என்ன சொல்கிறது
ஆனால், இஸ்லாம் மதத்தில் ஆண் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட முறை திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு சில காரணங்களும் கூறப்படுகின்றன.
ஒருவேளை தனது மனைவிகளிடம் சமமான அன்பும், அக்கறையும் செலுத்த முடியாத ஆண் பலதாரணம் செய்துக் கொள்ள கூடாது என்றும் கூறப்படுகிறது.
மேலும், முதல் மனைவி மூலம் பிள்ளை வரம் கிடைக்காத போது அந்த ஆண் இரண்டாம் திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று இஸ்லாம் மதத்தில் கூறப்படுவதாக அறியப்படுகிறது.