வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு தங்கம் கடத்திய பிரபல பாடகி மற்றும் மொடலிங் செய்யும் பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் இரண்டு கிலோகிராம் தங்க கட்டிகளை மறைத்துக் கொண்டு வந்த குற்றச்சாட்டில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தங்கத்தின் பெறுமதி ஒரு கோடி 36 லட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பாடகி ராகம பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான பெண் என தெரியவந்துள்ளதுடன், மொடல் கலைஞர் தங்காலை பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய பெண் என தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட மொடல் கலைஞர் தனது பயணப்பையில் குறித்த பவர் பேங்கினை மறைத்து வைத்திருந்த நிலையில் பாடகி தனது காற்சட்டை பையில் மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
டுபாய் எமிரேட்ஸ் சேவைக்கு சொந்தமான விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்று வந்தடைந்தனர். விமானத்தில் இருந்து வெளியேறும் போது சுங்க பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.