இந்த நீரை காலையில் எழுந்ததும் குடியுங்கள்!

எலுமிச்சை பழங்களை பாதியாக வெட்டி அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் 1/2 லிட்டர் நீரை ஊற்றி 3 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கி, 10-15 நிமிடம் குளிர வைக்க வேண்டும்.

பின் அந்த நீரை வடிகட்டி அதில் தேன் கலந்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தொடர்ந்து குடிக்க வேண்டும்.

நன்மைகள்
  • உடலின் நோயெர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, நோய்களின் தாக்கத்தில் இருந்து எளிதில் விடுபடலாம்.
  • மிகுந்த சோர்வு நிலையை உணர்பவர்கள் எலுமிச்சை வேகவைத்த நீரை குடித்தால் நம் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.
  • உடலின் மெட்டபாலிசத்தின் செயல்பாட்டை சீராக்கி, செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
  • நம் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் முழுவதையும் வெளியேற்றி, உடலை சுத்தமாக்க உதவுகிறது.
  • எலுமிச்சை வேகவைத்த நீர் நம் உடலின் pH அளவை சமநிலைப்படுத்தி, மன அழுத்த பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
  • அதிகப்படியான உடல் எடை உள்ளவர்கள், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் எலுமிச்சை வேகவைத்த நீரை குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.