குஜராத் மாநிலத்தில் நேற்று இருவேறு இடங்களில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் பாடகர்கள் மீது சிலர் லட்சக்கணக்கான ரூபாய்களை பணமழையாக பொழிந்துள்ளனர்.
குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் அம்மாநிலத்தில் மிகவும் பிரபலமான நாட்டுப்புற பாடகி கவுரவ ரபீனி மீது அங்கிருந்த சிலர் ரூபாய் நோட்டுகளை மழையாக பொழிந்தனர்.
இதேபோல் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற மற்றொரு இசை நிகழ்ச்சியில் மோடியின் முகமூடியை அணிந்த சிலர் பாடகர் மீது லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்தனர்.