பிரித்தானியாவில் முகமூடி கொள்ளையர்களின் தாக்குதலினால் இளம் தமிழ் பெண் ஒருவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார் என பிரித்தானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிருந்தா பாலராசா என்ற பெண் தனது வீட்டிலிருந்து 500 யார்ட் தொலைவில் இந்த தாக்குலுக்குள்ளாகியுள்ளார். அவரது தலையில் பாரிய காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வடமேற்கு லண்டனில் Edgware பகுதியில் இடம்பெற்ற தாக்குதலின் போது தன்னை தாக்க வேண்டாம் என 24 வயதான இளம் பெண்ணின் பரிதாப நிலை குறித்து நேரில் கண்டவர் சாட்சியம் வழங்கியுள்ளார்.
“அவரது தோள்பட்டையில் இருந்த பையை பறித்த குண்டார்கள் அவரை தாக்கும் போது, “வேண்டாம், வேண்டாம், வேண்டாம்” என பிருந்தா பாலராசா கெஞ்சினார்” என சாட்சியாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் இந்த தாக்குல் சம்பவம் இடம்பெற்ற போது அவரது தலையில் படுகாயமடைந்து வீதியில் விழுந்துள்ளார்.
பிருந்தா பாலராசாவை தாக்குவதற்கு முன்னர் அவரது பை மற்றும் கையடக்க தொலைபேசி பறிக்கப்பட்டுள்ளது. அவர் NHS அறக்கட்டளையில் பணி செய்யும் ஒருவர் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
லண்டனிலுள்ள இலங்கை கடையொன்றில் பிருந்தாவின் தந்தை பாலராசா பணியாற்றி வருகிறார். தாய் கமலேஷ்வரி, 28 வயதான பிரதிப் மற்றும் 21 வயதான பிருந்தன் ஆகியோருடன் வாழ்ந்து வருகின்றார்.
இலங்கையை சேர்ந்த இந்த குடும்பத்தினர், நேற்று லண்டன் Paddingtonஇல் உள்ள St Mary மருத்துவமனையில் உள்ள மகளை பார்க்க சென்றுள்ளனர். இதன் போது பிருந்தா கோமா நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அவர் மூச்சுவிடுவதற்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது தலையில் துழையிட்டு தலைக்குள் உறைந்து போயுள்ள இரத்தத்தை வெளியே எடுக்க வேண்டும். அது மிகவும் கடினமானது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பிருந்தா அண்மையிலேயே பல்கலைக்கழகம் ஒன்றிற்கு தெரிவாகியவர் என குறிப்பிடப்படுகின்றது.
அவரது தந்தை கடையொன்றில் வேலை செய்து வருகின்றார். அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் அவர்கள் வாழும் பகுதியில் வன்முறைகள் பாரிய அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரமும் இளம் பெண்ணிடம் கொள்ளையடிப்பதற்காக துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.