புலிகளின் முக்கியஸ்த்தர் கனடாவில் தஞ்சம்?

கப்பல்கள் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சீ 4 ரக வெடி மருந்தை கொண்டு வந்து கொடுத்த புலிகள் அமைப்பின் வெடி மருந்து இறக்குமதிக்கு பொறுப்பாக இருந்த சங்கிலி என்ற ரவி சங்கருக்கு கனேடிய அரசாங்கம் அரசியல் தஞ்சம் வழங்கியுள்ளது என சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

ரவி சங்கரை கைதுசெய்ய வவுனியா மேல் நீதிமன்றம் ஏற்கனவே பிடியாணை பிறப்பித்திருந்தது. ரவி சங்கர் விடுதலைப் புலிகளுக்கு அனுப்பியிருந்த ஆயிரம் கிலோ கிராம் சீ.4 ரக வெடி மருந்தை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியிருந்தனர்.

ரவி சங்கர் கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் ஷியா ஷிப்பிங் என்ற பெயரில் ட்ரக் வாகன நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாக கனேடிய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாக அந்த சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.