சந்தனம் மிஞ்சினால் எங்கெல்லாமோ தடவுவார்களாம். அது போல வெளிநாட்டில் வாழும் சில தமிழர்கள். பணத்தை தண்ணி போல இறைத்து, திருமணங்களையும் , புப்புனித நீராட்டு விழாக்களையும், ஏன் பிறந்த நாட்களையும் கொண்டாடி வருகிறார்கள். இவர்கள் ஒரு நிகழ்வுக்கு செலவு செய்யும் பணம், 100 குழந்தைகள் 1 வருடத்திற்கு நல்ல உணவு உண்ணக் கூடிய பணம். ஆனால் இவர்கள் அதனைப் பற்றி கவலைப்படுவதே இல்லை.
இங்கே பாருங்கள், ஆடம்பரமாக ஹெலிகொப்டரில் வந்து இறங்கி தாலி கட்டவேண்டிய நபருக்கு என்ன நடந்தது என்று ? ஹெலி இறங்கும் வேளையில் நடுவே சென்ற மின்சார கம்பியில் சிக்கி விழுந்து நொருங்கிவிட்டது. இதுவே காரில் அவர் வந்திருந்தால் சிலவேளை இந்த விபத்தில் இருந்து தப்பித்திருக்க முடியும். தமிழர்கள் சிலர் தமது பிறந்த நாளைக்கு லம்பகினி காரில் வந்து இறங்குவது !
பாகுபலி ஸ்டைலில் அரன்மனை கட்டி, அங்கே சென்று பிறந்த நாளை கொண்டாடுவது என்று பெரும் ஆடம்பரத்தில் உள்ளார்கள். புகைப்படம்(கமரா மென்) கொடுக்கும் காசே 12 லட்சங்களை தாண்டுகிறது. ஆனால் ஊரில் ஒருவேளை கஞ்சிக்கே கஷ்டப்படும் குடும்பங்களும் பிள்ளைகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த உதவியும் செய்ய இவர்களுக்கு மனம் வராது. சேர்த்துவைத்த புண்ணியம் தான் சந்ததியைக் காக்கும் என்று கூறுவார்கள். இனியாவது நாம் வந்த பாதையை திரும்பிப் பாருங்கள். சொந்த பந்தங்களுக்கு, ஆதரவற்றோருக்கு உதவிப் பாருங்கள். வாழும் போதே சொர்க்கம் கிட்டும்.