பெண் மாடல்களுக்கு தடையால் சவுதியில் நடந்த பேஷன் ஷோவில் பறந்து வந்த ஆடைகள் – வீடியோ

ஜெட்டா: சவுதி அரேபியாவில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு பல உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன.

தற்போது, பட்டத்து இளவரசராக முகம்மது பின் சல்மான் பொறுப்புக்கு வந்த பின்னர், கார் ஓட்டுவது மற்றும் மைதானத்திற்கு சென்று விளையாட்டுக்களை பார்ப்பது போன்றவற்றுக்கு பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு பொறுப்பிலும் பல்வேறு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில் பாதுகாப்பு படையிலும் பெண்கள் இணைக்கப்பட உள்ளனர்.

இந்நிலையில், சவுதியில் சமீபத்தில் பேஷன் ஷோ ஒன்று நடந்துள்ளது. ஆண் மாடல்கள் புதியாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்தனர்.

சவுதியில் பெண்கள் மாடலிங் செய்வது தடை செய்யப்பட்ட ஒன்று. இதனால், புதிதாக வடிவமைக்கப்பட்ட பெண்களுக்கான ஆடைகளை எப்படி அறிமுகப்படுத்துவது என்ற குழப்பத்தில் இருந்த பேஷன் ஷோ ஏற்பாட்டாளர்கள் வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்தனர்.

அதாவது, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் ட்ரோன்களில் பெண்களுக்கான ஆடைகளை மாட்டிவிட்டு நிகழ்ச்சி நடந்த அரங்கில் பறக்க விட்டுள்ளனர்.

இதனை குர்திஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் வீடியோவாக எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

தற்போது இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து கிண்டலான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். வீடியோவை பார்க்க..