தாடியைக் காப்பீடு செய்துள்ளாரா விராட் கோலி?: சக வீரர்கள் ஆச்சர்யம்!

தாடியின்றி சமீபகாலமாக இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியை காண முடிவதில்லை.

எனக்கு இப்படி இருக்கத்தான் பிடிக்கிறது. தாடியை எடுக்க மாட்டேன் என்றும் சமீபத்தில் பேட்டியளித்தார் கோலி.

இந்நிலையில் தன்னுடைய தாடியை விராட் கோலி காப்பீடு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கோலியின் சக வீரர்களின் ட்வீட்களும் இதை உறுதிப்படுத்துகின்றன.

இதுகுறித்த ட்வீட்டை வெளியிட்ட கேஎல் ராகுல், கூடவே சிசிடிவியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.

அதில் இருவர் கோலியின் தாடியை அளவெடுப்பது போலவும், பிறகு ஓர் ஒப்பந்தத்தில் கோலி கையெழுத்திடுவதுபோலவும் அதில் காட்சிகள் இருந்தன.

இதையடுத்து கோலி, தன் தாடியைக் காப்பீடு செய்துள்ளார் என்கிற செய்தி ஒன்று பரவிவருகிறது.

உங்கள் தாடியின் மீது அதிக விருப்பத்துடன் இருப்பது தெரியும். ஆனால் உங்கள் தாடியைக் காப்பீடு செய்தது குறித்த செய்திகள் என்னுடைய ஊகத்தை நிரூபிக்கின்றன என்று கூறியுள்ளார் கே.எல். ராகுல்.

அவர்தான் அதுபற்றிய வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சுழற்பந்து வீச்சாளர் சஹால் வெளியிட்டுள்ள ட்வீட்டில், கோலி தன்னுடைய தாடியைக் காப்பீடு செய்துள்ளதாகக் கேள்விப்படுகிறேன்.

பிரபலங்கள் மற்றும் அவர்களின் தாடி இடையேயான தொடர்பு இதிலும் தொடர்கிறது. தாடியை நன்கு பராமரிப்பார். ஆனால் இதை எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

தில்லியில் உள்ள பிரபல மேடம் துஸ்ஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியின் மெழுகுச் சிலை புதன்கிழமை முதல் பார்வையாளர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது.

இந்த மெழுகுச் சிலை வடிவமைப்புக்காக கோலியின் உருவ அடிப்படையில் 200 அளவைகளும், சில புகைப்படங்களும் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனால், அந்த வீடியோவில் உள்ள காட்சிகள் – மெழுகுச் சிலையின் அளவுக்காக எடுக்கப்பட்டவையாகவும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.