2000 பெண்களுடன் உறவு- கோடீஸ்வரருக்கு நேர்ந்த கதி

பிரித்தானியாவை சேர்ந்த கோடீஸ்வர இரவு விடுதி உரிமையாளர் தனது 77-வது வயதில் மரணமடைந்துள்ளார்.பீட்டர் ஸ்டிரிங்பேலோ என்ற நபர் பல இடங்களில் இரவு விடுதிகள் நடத்தி வந்த நிலையில் பெண்க்ள் மீது மிகவும் ஈர்ப்பு கொண்டவராக திகழ்ந்தார்.பீட்டர் ஒரு முறை அளித்த பேட்டியில் தான் இதுவரை 2000 பெண்களுடன் உறவு கொண்டுள்ளேன் என கூறி பலரையும் அதிர வைத்தார்.

இவருக்கு மூன்று முறை திருமணமாகி மூன்று மனைவியையுமே பிரிந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 2008-ஆம் ஆண்டு பீட்டருக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது.ஆனால் இதை வெளியுலகிலிருந்து பீட்டர் மறைத்தார்.பின்னர் இது கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியுலகுக்கு தெரியவந்தது.சில காலமாக நோய் முற்றியதால் பீட்டர் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இரு தினங்களுக்கு முன்னர் பீட்டர் உயிரிழந்துள்ளார்.பீட்டருக்கு பல விஐபி-க்கள் நட்பாக இருந்துள்ளதால் அவர்கள் அனைவரும் அவர் மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.