வைத்தியர்களின் காதலால் ஏற்பட்ட விபரீதம்!

கண்டி நாவலப்பிட்டியில் பெண் வைத்தியர் ஒருவரின் காதலால் விபரீத சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

பெண் வைத்தியர் ஒருவர் இன்னுமொரு ஆண் வைத்தியருடன் மோட்டார் வாகனத்தில் பயணிப்பதனை குறித்த பெண் வைத்தியரின் கணவர் அவதானித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவன், அவர்கள் பயணித்த மோட்டார் வாகனத்தை மோதிவிட்டு சென்றுள்ளார்.

பெண் வைத்தியரின் கணவரும் ஒரு வைத்தியராக பயணியாற்றுகின்ற நிலையில், மனைவியுடன் சென்ற வைத்தியருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபரான கணவர் 10000 ரூபா பணமும், 2 லட்சம் ரூபா 2 சரீர பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த 3 வைத்தியர்களும் பலஹிலவ்வ பிரதேசத்தின் வைத்தியசாலையில் ஒன்றாக சேவை செய்பவர்களாகும்.

வைத்தியசாலையில் நீண்ட காலமாக சேவை செய்யும் 47 வயதுடைய வைத்தியரின் 44 வயதுடைய மனைவி திருமணமாகாத வைத்தியருடன் தொடர்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் வைத்தியர்கள் மூவருக்கும் இடையில் மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக நாவலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் உள்ளது.

சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.