கண்டியில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சியில் ஆபாச காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பேருந்தில் பயணித்த பெண்கள் உட்பட பயணிகள் பெரும் அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.பெண் ஒருவர் குறித்த பேருந்தில் ஏறிய சந்தர்ப்பத்தில் பாலியல் சம்பந்தமான படங்கள் மற்றும் ஆபாசமான காட்சிகள் ஒளிபரப்பாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து குறித்த பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.குறித்த பேருந்து ஹஸலக பிரதேசத்தை சேர்ந்த நபருக்கு சொந்தமானதென கண்டறியப்பட்டுள்ளது.