திருமணத்திற்கு முன் ஏற்பட்ட தொடர்பு: அழகிய மனைவி குழந்தையை கொலை செய்த கணவன்

புனேவில் நபர் ஒருவர் தனது திருமணத்திற்கு முன்னர் பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பை திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்த காரணத்தால் விபரீத முடிவை எடுத்து பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.

வசந்த் – அஸ்வினிக்கு திருமணமாகி 8 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று, வசந்த் கூலிப்படை ஏவி தனது மனைவி மற்றும் குழந்தையை காருக்குள் வைத்து கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.

பின்னர், மர்மநபர்கள் தாக்கிவிட்டதாக பொலிசில் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து கொலை செய்யப்பட்ட இருவரும் பிரேத பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதில், கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த பொலிசார் வந்திடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினார்கள். இதில், அவர் மனைவி மற்றும் குழந்தையை கூலிப்படையை ஏவி கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

வசந்த் திருமணத்துக்கு முன் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். திருமணத்திற்கு பின்னரும் அந்த பெண்ணுடனான தொடர்பை விடவில்லை. இந்தநிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.

தன்னை திருமணம் செய்துகொள்ள அஸ்வினி மற்றும் குழந்தை இடையூறாக இருக்கும் என அந்த பெண் கூறியிருக்கிறார்.

இதையடுத்து காதலியின் தூண்டுதலின்பேரில் தத்தா வசந்த் மனைவி மற்றும் குழந்தையை தீர்த்து கட்ட முடிவு செய்தார். இதற்காக ரூ.1 லட்சம் கொடுத்து கூலிப்படையை தயார் செய்து, தனது சதி திட்டத்தை நிறைவேற்றி உள்ளார்.

இதையடுத்து பொலிசார் வசந்த்தை கைது செய்தனர். மேலும் அவரது காதலி மற்றும் கூலிப்படையினர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.