5வது மாடியில் தொங்கிய சிறுவன் – சுவறின் மேல் ஏறி காப்பாற்றிய முதியவர்..

சீனாவில் 5வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவனை ஸ்பைடர் மேன் போல் சுவற்றின் மேல் ஏறிச்சென்று அச்சிறுவனை முதியவர் ஒருவர் காப்பாறியுள்ளார்.

சீனாவின் ஹூனான் மாகாணத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் சிறுவன் ஒருவன் 5வது மாடியில் இருந்து தவறிவிழுந்தான். ஜன்னல் இடைவெளியில் அவன் தலை சிக்கிக் கொண்டதால் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த அச்சிறுவன் உதவிகோரி அலறினான்.

சிறுவனின் அழுகுரலைக் கேட்ட ஜியாங்-சின் என்ற முதியவர் படிக்கட்டுகள் வழியாகச் செல்ல நேரமில்லை என்பதை உணர்ந்து, விறுவிறுவென மாடிச்சுவர்களில் ஏறிச்சென்று தக்க நேரத்தில் சிறுவனை மீட்டார்.

இது குறித்த காணொளி இதோ…