வலியால் துடித்த காதலிக்காக வெட்கத்தை விட்டு காதலன் செய்த அதிர்ச்சி வைத்தியம்!

வலியின் மத்தியிலும் ஹீல்ஸ் அணிவதுதான் பெண்களின் தனி விருப்பம். ஆனால் ஹீல்ஸ் அதிகம் பயன்படுத்தினால் பயங்கர கால் வலி எடுக்கும் என்பதும் அது எந்த அளவிற்கு இருக்கும் என்பதும் ஹீல்ஸ் அணியும் பெண்களுக்கு மட்டுமே தெரியும். ஹீல்ஸ் அணிவது தவறல்ல, ஆனால் அதன் மூலம் ஏற்படும் பக்கவிளைவுகளையும் அறிந்துக் கொள்ள வேண்டும்.

சீனாவில் ஒரு காதலன் தனது காதலிக்கு ஹீல்ஸ் காரணத்தால் ஏற்பட்ட வலிக்கு தனது சப்பாத்து மூலம் நிவாரணம் அளித்து ஒரேநாளில் உலகெங்கும் பிரபலமாகிவிட்டார்.

தெற்கு சீனாவில் உள்ள ஷாபின்பா மாவட்ட க்ஸின்கியோ எனும் மருத்துவமனையிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

க்ஸின்கியோ மருத்துவமனையின் ஐந்தாம் மாடியில் வெளி நோயாளர் பிரிவுக்கு இந்த காதல் இணையர் வந்துள்ளனர். அப்போது குறித்த காதலி ஓவென்று எனக் கத்தியவாறே நிலத்தில் சரிந்தார். அதன்போதுதான் அவருக்கு குதிக்கால் வலி தீவிரமாகியமை தெரியவந்தது.

உடனடியாக அப்பெண்ணின் காதலர் தனது சப்பாத்தைக் கழற்றி அவருக்கு அணிவித்துவிட்டு தனது காதலியின் ஹீல்ஸை தான் வாங்கி அணிந்து கொண்டார்.

இந்த செயலை கண்டு சிலர் வியந்தனர். சிலர் வேடிக்கையாக எடுத்துக் கொண்டனர். அங்கே இருந்த பெண் ஒருவர் புகைப்படம் எடுத்து “காதலிக்காக வெட்கத்தைவிட்டு ஹீல்ஸ் அணிந்த உண்மைக் காதலன்” எனக் குறிப்பிட்டு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

வீட்டில்கூட பெண்களின் ஹீல்ஸை அணிந்துகொள்ளும் ஆண்களின் மத்தியில் ஒரு பொது இடத்தில் தனது காதலியின் ஹீல்ஸை அணிந்த குறித்த வாலிபரை சீன ஊடகங்கள் புகழ்ந்து பாராட்டியுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.