கம்பஹா கிடகம்முல்ல பிரதேசத்தில் உணவகம் என்ற போர்வையில் நடாத்திச் செல்லப்பட்ட விலைமகள் விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது அங்கிருந்து 7 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
அவர்கள் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் , எதிர்வரும் 18ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கம்பஹா காவற்துறையால் நேற்று அதிகாலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை ,குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படும் போது அவ்விடத்திற்கு வருகை தந்திருந்த 6 பேர் காவற்துறையால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண்களில் தொலைக்காட்சி நாடக நடிகையொருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் குறித்த விடுதியில் பணிபுரியும் அதேவேளை , பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பெண்கள் 30 மற்றும் 40 வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள் என காவற்துறையினர் தெரிவித்தனர்.
இவர்கள் நிட்டம்புவ , கனேமுல்ல , யாகொட , சியம்லாபே மற்றும் தெல்கொட போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.
குறித்த பெண்கள் இதற்கு முன்னரும் இதுபோன்ற இடங்களில் பணிபுரிந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த விலைமகள் விடுதி தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான விபரங்களை பொலிஸார் இன்னும் வெளியிடவில்லை. எனினும் விரையில் முழுமையான விபரங்களை விரைவில் வெளியிடுவார்கள் என நம்பப்படுகிறது.