மகனின் இறுதிச் சடங்கில் பங்கேற்று திரும்பும் வழியில் கோர விபத்தில் பலியான பெற்றோர்….!!

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் மகனின் இறுதிச்சடங்கு முடித்து குடியிருப்புக்கு திரும்பிய பெற்றோர் கார் விபத்தில் பலியான துயர சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.டென்னிசி மாகாணத்தில் நாஷ்விலி நகரில் அமைந்துள்ள மாநகர நெடுஞ்சாலையிலேயே குறித்த துயர சம்பவம் நடந்துள்ளது.சனிக்கிழமை சுமார் 6 மணி மாலையில் விபத்து நடந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

விபத்தின்போது கணவரே வாகனத்தை செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது.வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள பாறை கூட்டத்தில் மோதி விபத்து நேர்ந்திருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.மட்டுமின்றி வாகனம் மோதிய வேகத்தில் அந்த வாகனத்தில் இருந்த கணவனும் மனைவியும் சம்பவயிடத்திலேயே உடல் நசுங்கி மரணமடைந்துள்ளனர்.

குறித்த கோர விபத்தை அடுத்து ஊயவழ சாலையில் இருபக்கமும் பொலிசாரால் மூடப்பட்டுள்ளது மட்டுமின்றி, போக்குவரத்தை வேறு பாதைக்கு திருப்பியும் விட்டிருந்தனர்.

மகனின் இறுதிச்சடங்கை முடித்துவிட்டு குடியிருப்புக்கு திரும்பும் நிலையிலேயே, குறித்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.மேலதிக தகவல்கள் விசாரணைக்கு பின்னரே தெரியவரும் எனவும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.