பரிஸில் நடந்த அதிசயம்! தமிழ் மக்களுக்கு கிடைத்த தெய்வீக காட்சி

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த தமிழ் பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பரிஸ் சொய்சி லே ரோய் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சத்திய நாயாரண பதுகா ஆலயத்தில் பத்து நாள் திருவிழா நடைபெற்று வருகிறது.

அங்குள்ள பெருமளவு புலம்பெயர் தமிழ் சாய் அருள் வேண்டி பிராத்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

யாரும் எதிர்பாராத வேளையில் சாயின் விக்கிரகத்திலிருந்து ஒளிக்கீற்று பக்தர்களை நோக்கி வீசியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி, திருவிழாவினை பதிவு செய்த கமராவில், ஒளிக்கீற்று வெளியானமை தெளிவாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.

சாயி தமக்கு நேரடியாக அருள் கொடுத்ததாக அங்கிருந்த பக்தர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.