நைஜீரிய நாட்டின் Anambra மாகாணத்தில் உள்ள Mbosi பகுதியைச் சேர்ந்தவர் Azubuike, இவர் அந்தப்பகுதியில் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவராவார்.
அண்மையில் Azubuike-யின் தந்தை மரணமடைந்ததைத் தொடர்ந்து, அவரது உடலை அடக்கம் செய்வதற்காக புதிய BMW கார் ஒன்றை வாங்கி அதனை சவப்பெட்டியாக பயன்படுத்தி அவரின் உடலை, பூமிக்குள் அடக்கம் செய்துள்ளது அந்தப்பகுதியினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Azubuike-வின் தந்தை அடக்கம் செய்யப் பயன்படுத்திய BMW காரின் மதிப்பு $66,000 டொலர் ஆகும்.
உடலை புதிய BMW காரில் வைத்து அடக்கம் செய்ய வேண்டும் என்பது தனது ஆசை என அவர் முன்னரே கூறியிருந்ததாகவும், தனது தந்தையின் ஆசையை தான் நிறைவேற்றியிருப்பதாகவும் Azubuike கூறியுள்ளார்.
விலையுயர்ந்த BMW கார் சவப்பெட்டியாக பயன்படுத்தப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.