பிரித்தானிய மகாராணியின் பிறந்த நாளில் கௌரவிக்கப்படுவோர் பட்டியலில் இடம்பிடித்த இலங்கைப் பெண்மணி!!

பிரிட்டன் மகாராணியின் 92 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கௌரவிக்கப்படுவோர் பட்டியல் வெளியாகியுள்ளது.இதில் இலங்கையில் பிறந்த ஆஸ்திரேலிய பெண் ஒருவரது பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவில் தொண்டுப்பணிகளில் ஈடுபட்டு வரும் ரோமோலா செபஸ்டியன் பிள்ளை என்பவரே இந்த கௌரவத்துக்கு தெரிவாகியுள்ளார்.டார்வின் பிரதேசத்தில் அவர் தமது தொண்டு சேவைகளை மேற்கொண்டு வருகிறார்

இந்த நிலையில், மகாராணியின் கௌரவிப்புக்காக தாம் தெரிவு செய்யப்பட்டமை குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ள ரோமோலா, தாம் நாடு திரும்பி இலங்கை மக்களுக்கு தொண்டு சேவைகள் செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்