விஜய் காலை மிதித்த கீர்த்தி சுரேஸ் – சர்ச்சையான புகைப்படம்!

கீர்த்தி சுரேஷ் மார்க்கெட் தமிழ், தெலுங்கு பட உலகில் சக நடிகைகள் பொறாமைப்படும் அளவு எகிறி வருகிறது. சமீபத்தில் அவர் நடிப்பில் வந்த நடிகையர் திலகம் இரு மொழிகளிலுமே நல்ல வசூல் பார்த்தது. இப்போது விஜய் ஜோடியாக பெயரிடப்படாத படம், விஷாலுடன் சண்டக்கோழி-2, விக்ரமுடன் சாமி-2 ஆகிய மூன்று படங்களில் நடிக்கிறார்.

விஜய்யுடன் நடிக்கும் பட வேலைகள் விறுவிறுப்பாக நடக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்கிறார். படத்தின் தலைப்பும் முதல் தோற்றமும் விஜய் பிறந்த நாளில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. விரைவில் அமெரிக்காவில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் பயணமாக உள்ளனர்.

இந்த நிலையில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் நடித்தபோது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த படத்தில் விஜய் தரையில் உட்கார்ந்து இருக்கிறார்.

அருகே சோபாவில் கீர்த்தி சுரேஷ் அமர்ந்து கொண்டு விஜய் காலின் மீது தனது காலை வைத்து மிதிக்கிறார்.

படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு எடுக்கப்பட்டு ரகசியமாக வைத்திருந்த இந்த புகைப்படத்தை யாரோ படக்குழுவினர் அனுமதி இல்லாமல் சமூக வலைத்தளத்தில் கசிய விட்டுள்ளனர்.

201806120234469601_The-controversy-surrounding-Vijays-picture-Responding-to_SECVPF.gif விஜய் காலை மிதித்த கீர்த்தி சுரேஸ் – சர்ச்சையான புகைப்படம்! விஜய் காலை மிதித்த கீர்த்தி சுரேஸ் – சர்ச்சையான புகைப்படம்! 201806120234469601 The controversy surrounding Vijays picture Responding to SECVPFஇது வைரலாக பரவியதும் உடனே நீக்கி விட்டார்கள். இந்த படத்தை பார்த்த விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள். கீர்த்தி சுரேசை கண்டித்தும், விமர்சித்தும் சமூக வலைத்தளத்தை பரபரப்பாக்கி வருகிறார்கள்.

கீர்த்தி சுரேசுக்கு எதிராக மீம்ஸ்களை உருவாக்கியும் பரவ விடுகின்றனர். இதனால் கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சியாகி இருக்கிறார்.