காற்­சட்­டைக்குள் ஏறிய பாம்புடன் 30 நிமி­டங்கள் சைக்­கிளில் பயணித்த நபர்

தனது காற்­சட்­டைக்குள் பாம்பு ஒன்று ஏறி­யதை அறி­யாமல் இளைஞரொருவர் 30 நிமி­டங்கள் மோட்டார் சைக்­கிளை செலுத்திச் சென்ற சம்­பவம் கர்­நா­டகா மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

எனினும் அதிர்ஷ்­ட­வ­ச­மாக அந்த இளைஞர் உயிர் தப்­பினார். கதக் மாவட்டம், நராகுண்ட் நகரைச் சேர்ந்த வீரேஷ் கடே­மணி எனும் 32 வய­தான இளை­ஞ­ருக்கே இந்த அதிர்­ச்சி அனு­பவம் ஏற்­பட்­டுள்­ளது.

மேலும் தெரிய வருவதாவது. இவர் சிறிய ஹோட்­ட­லொன்றை நடத்தி வரு­ம் ­நி­லையில், கடந்த சனிக்­ கி­ழமை தனது ஹோட்­ட­லுக்கு தேவை­யான மரக்­க­றி­களை வாங்­குவ­தற்­காக சந்­தைக்குச் சென்­றார்.

அப்­போது, அவரின் காற்­சட்­டைக்குள் ஏதோ ஊர்­வ­துபோல் இருந்­துள்­ளது. தண்ணீர் ஏதும் பட்­டி­ருக்கும் என நினைத்து மோட்டார் சைக்­கிளை செலுத்­து­வ­தி­லேயே வீரேஷ் கவ­ன­மாக இருந்­து ­விட்டாராம், அதன்பின் சந்தைக்கு சென்ற வீரேஷ் தனது ஹோட்­ட­லுக்கு தேவை­யான காய்­க­றிகள் அனைத்­தையும் வாங்­கி­விட்டு, நண்­பர்­களைச் சந்­தித்­து­விட்டு திரும்­பினார்.

அப்போது, தனது கால் பகு­தியில் பாம்பின் வால்­ப­குதி இருப்­பதைக் கண்டு வீரேஷ் நடுங்­கிப்­போனார். உடனே மோட்டார் சைக்­கிளை கீழே போட்­டு­விட்டு, அருகில் உள்ள ஒரு கடைக்குள் சென்று தனது காற்சட்டையை கழற்றி வீசி­யுள்ளார்.

அப்­போது, அவரின் காற்­சட்­டை­யி­லி­ருந்து 2 அடி­நீ­ளத்தில் பாம்பு ஒன்று ஓடி­யுள்­ளது. இதைக் கண்ட அங்­கி­ருந்­த­வர்கள் அதை அடிக்க முற்­பட்­ட­போது, அருகில் இருந்த கழி­வுநீர் தொட்­டிக்குள் சென்று மறைந்து விட்டதென அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.